இந்தியாவில் ஒரேநாளில் 34 ஆயிரத்து 457 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை மூன்று கோடியே 23 லட்சத்து 93 ஆயிரத்து 286ஆக அதிகரித்துள்ளது. இதுவரை நான்கு லட்சத்து 33 ஆயிரத்து 964 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 97.54 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20ஆம் தேதிவரை 50 கோடியே 45 லட்சத்து 76 ஆயிரத்து 158 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் 17 லட்சத்து 21 ஆயிரத்து 205 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.