கரோனா மூன்றாவது அலை குறித்த அச்சம் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் நேற்று (ஆக.18) மட்டும் 36 ஆயிரத்து 401 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 23 லட்சத்து 22 ஆயிரத்து 258ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 530 நபர்கள் கரோனா தொற்றல் உயிரிழந்தனர். இதுவரை மொத்த உயிரிழப்பு நான்கு லட்சத்து 33 ஆயிரத்து 49ஆக உள்ளது.
நேற்று (ஆக.18) மட்டும் 39 ஆயிரத்து 157 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மூன்று லட்சத்து 64 ஆயிரத்து 129 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நாட்டில் மொத்தமாக இதுவரை 56 கோடியே 64 லட்சத்து 88 ஆயிரத்து 433 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் இதுவரை 50 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:நாட்டில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை 50 கோடியைக் கடந்தது