புது டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39 ஆயிரத்து 97 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 13 லட்சத்து 32 ஆயிரத்து 159 ஆக உள்ளது.
மேலும் 35 ஆயிரத்து 87 பேர் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 5 லட்சத்து 3 ஆயிரத்து 166 ஆக உள்ளது. இதனால் குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.35% ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 546 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 20 ஆயிரத்து 16 ஆக உயர்ந்துள்ளது.
மொத்த தொற்று எண்ணிக்கை
இதுவரை இந்தியாவில் கரோனா தொற்றுக்காக 4 லட்சத்து 8 ஆயிரத்து 977 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையில் 1.31% ஆகும்.
வாராந்திர தொற்று உறுதி விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து 2.22% ஆக உள்ளது. தினசரி தொற்று விகிதம் தொடர்ந்து 33 நாள்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக 2.40%, ஆகப் பதிவாகி உள்ளது.
தடுப்பூசி விவரம்
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ், நாட்டில் இதுவரை 42 கோடியே 78 லட்சத்து 82 ஆயிரத்து 261 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்ந்து, ஜூலை 23 வரை மொத்தம் 45 கோடியே 45 லட்சத்து 70 ஆயிரத்து 811 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் நேற்று (ஜூலை 23) ஒரே நாளில் 16 லட்சத்து 31 ஆயிரத்து 266 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு பிரச்சினை தீர்க்கப்படும்- அமைச்சர் மா. சுப்பிரமணியம்