இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்து 93 பேருக்கு புதியதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 11 லட்சத்து 74 ஆயிரத்து 322 ஆக உள்ளது.
அதேபோல் நேற்று (ஜூலை 19) மட்டும் 45 ஆயிரத்து 254 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மொத்தமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 3 லட்சத்து 53 ஆயிரத்து 710 ஆக காணப்படுகிறது.
மேலும் கரோனா தொற்றால் இதுவரை 4 லட்சத்து 14 ஆயிரத்து 482 உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை 4 லட்சத்து 6 ஆயிரத்து 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் புள்ளிவிவர தகவல்கள் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில் விடுத்துள்ள அறிக்கையில் மொத்தமாக இதுவரை 41 கோடியே 18 லட்சத்து 46 ஆயிரத்து 401 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 125 நாள்களுக்கு பிறகு கரோனா பெருந்தொற்று பாதிப்பாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி