இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60 ஆயிரத்து 753 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 98 லட்சத்து 23 ஆயிரத்து 546ஆக உள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிகளவில் கரோனா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
குறிப்பாக கேரளாவில் நேற்று (ஜூன் 18) ஒரேநாளில் 11 ஆயிரத்து 361 பேருக்குத் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட அதிகமாகும்.
அடுத்தபடியாக மகாராஷ்டிர மாநிலம் உள்ளது. அங்கு, ஒன்பதாயிரத்து 798 பேருக்குத் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.