டெல்லி: இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 48 லட்சத்து 93 ஆயிரத்து 410 ஆக உயர்ந்துள்ளது.
20 கோடியைக் கடந்த தடுப்பூசி பயனாளர்களின் எண்ணிக்கை! - இந்தியா கரோனா
இந்தியாவில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 364 பேர், புதிதாக கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
India coronavirus count
மொத்தம் 2 கோடியே 75 லட்சத்து 55 ஆயிரத்து 457 பேர் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 3 லட்சத்து, 18 ஆயிரத்து, 895 பேர் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 3,660 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி 23 லட்சத்து, 43 ஆயிரத்து 152 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 20 கோடியே 57லட்சத்து 20 ஆயிரத்து 660 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.