நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் (ஜன. 08) இன்று வரை 1.04 கோடி கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா
கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 139 கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையைவிட குறைவு. ஒரே நாளில் 234 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கரோனா பாதிப்பாளர்கள் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 4 லட்சத்து 13 ஆயிரத்து 417 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 570 ஆகவும் உள்ளதாகவும் சுகாதார, குடும்ப நல அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. கரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்துவருகிறது.
கோவிட்-19 பரிசோதனை நிலவரம்
தற்போது வரை நாட்டில் 1 கோடியே 37 ஆயிரத்து 398 பேர் கரோனா வைரஸ் இல் இருந்து மீண்டுள்ளனர். தற்போது, 2 லட்சத்து 25 ஆயிரத்து 449 பேர் சிகிச்சையில் உள்ளனர். மீட்பு விகிதம் 96.36 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.45 சதவீதமாகவும் உள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) தகவலின் படி, ஜனவரி 7 ஆம் தேதி வரை 9 லட்சத்து 35 ஆயிரத்து 369 தொற்று மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 17 கோடியே 93 லட்சத்து 36 ஆயிரத்து 364 ஆக உள்ளது.
கரோனா பரவல் கோவிட்-19 எண்ணிக்கை
மாதம்/தேதி எண்ணிக்கை
ஆகஸ்ட் - 7 20 லட்சம்