டெல்லி: இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 39 ஆயிரத்து 70 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 491 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 19 லட்சத்து 34 ஆயிரத்து 455ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை நான்கு லட்சத்து 27 ஆயிரத்து 862ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை மூன்று கோடியே 10 லட்சத்து 99 ஆயிரத்து 771ஆக உள்ளது. அத்துடன், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 55 லட்சத்து 91 ஆயிரத்து 657 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.