தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'அனைத்துவித சவால்களை எதிர்கொள்ளும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு' - பிரதமர் மோடி - பிரதமர் மோடி

கரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதாகட்டும், எல்லையில் போராடுவதாகட்டும் அனைத்துச் சவால்களையும் எதிர்கொள்ளும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு என்பதை கடந்தாண்டு நிரூபித்திருக்கிறோம் எனப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

India capable of meeting all challenges
'அனைத்து வித சவால்களை எதிர்கொள்ளும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு'- பிரதமர் மோடி

By

Published : Jan 28, 2021, 5:21 PM IST

டெல்லி:அனைத்துவிதமான சவால்களை எதிர்கொள்ளும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு என்பதை கடந்தாண்டு நிரூபித்திருக்கிறோம் எனப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி காரியப்பா மைதானத்தில் நடைபெற்ற தேசிய மாணவர் படை நிகழ்ச்சியில் பேசியுள்ளார். மேலும், அந்நிகழ்வில் அவர் பேசும்போது, கரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரித்ததைக் குறிப்பிட்டார்.

தடுப்பூசியில் இந்தியா தற்சார்பை எட்டியுள்ளது என்றால், ஆயுதப்படைகளை நவீனமாக்க இந்தியா வீரியத்துடன் செயல்பட்டுவருகிறது என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவின் ஒவ்வொரு படைப்பிரிவுகளையும் சிறந்தது என்பதை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுகின்றன என்றார்.

ரபேல் விமானம் இந்தியா வந்தபோது எரிபொருள் நிரப்ப கிரேக்கமும் அரபு அமீரகமும் உதவிபுரிந்ததைச் சுட்டிக்காட்டி, வளைகுடா நாடுகளில் இந்தியாவின் உறவு மேம்பட்டுவருவதாக கூறினார்.

மேலும், இந்தியா பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் பெரிய உற்பத்தியாளராக விரைவில் மாறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க:குடியரசு தலைவர் உரையை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details