தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய கனடா விவகாரம் எதிரொலி! கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணங்கள்!

இந்தியா கனடா இடையில் பதட்டமான சூழல் நிலவி வருவதால் கனடா செல்லும் விமானங்களின் கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய கனடா விவகாரம் எதிரொலி: கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணங்கள்
இந்திய கனடா விவகாரம் எதிரொலி: கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணங்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 4:06 PM IST

ஹைதராபாத்:கனடாவின் சுர்ரே நகரில் காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். மத்திய அரசால் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த அவர் கனடாவில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விவகாரத்தை கனடா நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா மண்ணில் வெளிநாட்டை சேர்ந்த எவரும் இங்கு வசிக்கும் குடிமகனை கொல்வது என்பது ஏற்க முடியாதது. அது கனடாவின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல். இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்ற உண்மையை வெளிக்கொண்டுவர கனடா அரசுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனை இந்திய அரசாங்கம் கனேடிய பிரதமரின் குற்றச்சாட்டுகளை "முற்றிலும் ஆதாரமற்றவை” என நிராகரித்தது.இதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் தங்களுடைய வெளியுறவு துறை அதிகாரிகளை வெளியோற்றினர்.

இந்தியா கனடா இடையில் பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், கனேடிய குடிமக்களுக்கு விசா வழங்குவதை இந்தியா அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தது. மேலும் கனடா தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது என்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கனடா அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்ததன் காரணமாகவே இந்திய தூதரகத்தில் விசா வழங்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இதனையடுத்து கனடா செல்லும் விமான கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. சாதாரண நாட்களில் ஐதராபாத்தில் இருந்து துபாய் வழியாக கனடாவுக்கு செல்ல டிக்கெட்டின் விலை ரூ.55,000 முதல் ரூ.65,000 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், தற்போது அந்த நிலை இல்லை என ஐதராபாத்தை சேர்ந்த டிராவல்ஸ் ஏஜென்டுகள் 'ஈடிவி பாரத்' நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

தற்போது, ஒரு வழி டிக்கெட் விலை ரூ.1.35 லட்சம் முதல் ரூ. 1.50 லட்சம் வரை விற்பனை செய்யப்படு வதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுவாக செப்டம்பர் கடைசி வாரத்தில் கனடாவின் கல்வி நிறுவனங்கள் தங்கள் வகுப்புகளை தொடங்குவதால், கல்வியாண்டின் தொடக்கத்தில் விமான டிக்கெட் விலை சற்று அதிகமாக காணப்படுவது வழக்கம்.

ஆனால் தற்போது இந்தியா - கனடா இடையில் பதட்டமான சூழல் நிலவி வருவதால் இதனை பயன்படுத்தி விமான கட்டணங்கள் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் வரும் காலங்காலில் மேலும் விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க:வசூல் வேட்டையில் பதானை ஓரங்கட்டிய ஜவான்... ரூ.1000 கோடியை நெருங்க இன்னும் இவ்வளவு தான் பாக்கி!

ABOUT THE AUTHOR

...view details