உலகிலேயே முதல் நாடாக இந்தியாவில் 12 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 92 நாள்களில் இந்தியா இதனை செய்துள்ளது. அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. 12 கோடி கரோனா தடுப்பூசி செலுத்த அமெரிக்கா 97 நாள்களை எடுத்து கொண்டது. மூன்றாவது இடத்தில் சீனா உள்ளது.
12 கோடி தடுப்பூசிகளை செலுத்திய இந்தியா! - கொரோனா தடுப்பூசி
டெல்லி: உலகிலேயே முதல் நாடாக இந்தியாவில் 12 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி
இன்று காலை 7 மணி நிலவரப்படி, இந்தியாவில் 12,26,22,590 கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனா முன்களப்பணியாளர்களில் 91,28,146 பேருக்கு முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. 1,12,33,415 பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 1 கோடி தடுப்பூசி வரை செலுத்தப்பட்டுள்ளது.