தமிழ்நாடு

tamil nadu

கோதுமை ஏற்றுமதிக்கு தடை- விலை ஏற்றத்தை தடுக்க நடவடிக்கை

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் ஏற்படும் விலைஉயர்வை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

By

Published : May 14, 2022, 12:46 PM IST

Published : May 14, 2022, 12:46 PM IST

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா-விலை ஏற்றத்தை தடுக்க நடவடிக்கை
கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா-விலை ஏற்றத்தை தடுக்க நடவடிக்கை

டெல்லி, உள்நாட்டு விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா உடனடியாகத் தடை விதித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த அறிவிப்பிற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதி உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது, மே 13 ஆம் தேதி வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் தலைமை வெளியிட்ட அறிவிப்பில் "கோதுமைக்கான ஏற்றுமதி கொள்கை உடனடியாக தடைசெய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

மற்ற நாடுகளின் உணவுப் பாதுகாப்பு தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்திய அரசு வழங்கும் அனுமதியின் அடிப்படையில் மற்றும் அவர்களின் அரசாங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் கோதுமை ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்றும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதையும் படிங்க:அசைவ உணவால் உடல்நலக்குறைவு!-ஓட்டல் மீது புகார்

ABOUT THE AUTHOR

...view details