தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போர் முனையில் உக்ரைன் - இந்தியர்கள் வெளியேற அவசர உத்தரவு

உக்ரைன் நாட்டில் போர் மேகம் சூழ்ந்துள்ளதால் இந்திய குடிமக்களை உடனடியாக நாடு திரும்ப வெளியுறவுத்துறை அமைச்சகம் அவசர உத்தரவிட்டுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சகம்
வெளியுறவுத்துறை அமைச்சகம்

By

Published : Feb 15, 2022, 12:45 PM IST

உக்ரைன் நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மிகவும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. அண்டை நாடான ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்திருவருகிறது.

உக்ரைன் நாட்டு எல்லையில் சுமார் ஒரு லட்சம் படையினரை ரஷ்யா தற்போது குவித்துவைத்து ராணுவ ஒத்திகை மேற்கொண்டுவருகிறது. இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் கவலையை ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக நாடு திரும்புமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. "உக்ரைனில் நிலவும் தற்கால சூழலை கருத்தில் கொண்டு இந்தியர்கள் அனைவரும் குறிப்பாக மாணவர்கள் அந்நாட்டிலிருந்து வெளியேற அறிவுறுத்தப்படுகிறது.

அதேபோல் இந்தியர்கள் உக்ரைன் நாட்டிற்கு தேவையற்ற பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. எனவே, உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள் தூதரக அலுவலர்களை தொடர்பு கொண்டு சேவையை பெற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது" என வெளியுறவுத்துறை அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது பிப்ரவரி 16ஆம் தேதி ரஷ்யா தாக்குதலை தொடங்கும் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:நேபாள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பதவிக்கு ஆபத்து

ABOUT THE AUTHOR

...view details