தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டிச.6ல் கூடுகிறது இந்தியா கூட்டணி! - அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை? - 5 State Assembly Election Results

India Alliance Next Meeting : 4 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் அடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வரும் டிசம்பர் 6ஆம் தேதி இந்தியா கூட்டணி கட்சிகள் கூடுகின்றன.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 12:45 PM IST

டெல்லி : நான்கு மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த சூழல் நிலவவில்லை. அதேநேரம் எதிர்பாராதவிதமாக தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் டிசம்பர் 6ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்து உள்ளார். இந்த கூட்டத்தில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிசோரம் மாநிலத்தில் நாளை (டிச. 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 5 மாநில தேர்தல் முடிவுகளை முன்னுதாரணமாக கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக திமுக, சிவசேனா உத்தவ் அணி, பிஜூ ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கூட்டணிக் கட்சிகளுக்கு மல்லிகார்ஜுன் கார்கே அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாஜகவை வீழ்த்த நாடு முழுக்க உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்ற குரல் தொடர்ந்து எதிரொலித்து வரும் நிலையில் அதில் உள்ள பல்வேறு சிக்கல்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க :Live Election Results: 4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 12 மணி நிலவரம்

ABOUT THE AUTHOR

...view details