இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் மும்முரமாகச் செயல்பட்டுவரும் நிலையில், இம்மாத தொடக்கத்தில் ஒன்றிய அரசு தடுப்பூசி கொள்கை முடிவில் முக்கிய மாற்றத்தை மேற்கொண்டது.
அதன்படி, நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு நேற்று (ஜூன் 21) முதல் நடைமுறைக்குவந்தது.
ஒரேநாளில் 85 லட்சம் தடுப்பூசி
இந்தக் கொள்கை மாற்றத்திற்கான பலன் நேரடியாகப் பிரதிபலிக்கும்விதமாக நேற்று ஒரேநாளில் 85 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலகளவில் ஒரேநாளில் அதிகளவிலான தடுப்பூசி செலுத்தப்பட்ட சாதனை இதுவே.
இந்தியாவில் இதற்கு முன்னதாக ஏப்ரல் 2ஆம் தேதி ஒரேநாளில் 42.65 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதே அதிகப்படியான எண்ணிக்கையாக இருந்தது.
நாடு முழுவதும் இதுவரை 28.39 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 5.06 கோடி பேர் இரண்டு டோஸ்களும் செலுத்திக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:75ஆயிரம் இரும்பு போல்டுகளைக் கொண்டு காந்தி சிலை - சிற்பி அசத்தல்