தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

India Corona : 50 ஆயிரத்தை நெருங்கிய கரோனா பரவல்! உச்சம் தொடும் கரோனா! - தினசரி கரோனா பாதிப்பு

8 மாதங்களுக்கு பின் முதல் முறையாக நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியது.

Corona
Corona

By

Published : Apr 14, 2023, 1:55 PM IST

டெல்லி :கடந்த சில நாட்களாக நாட்டில் கரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 109 ஆக பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது. கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 158 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

8 மாதங்களுக்கு பின் நாட்டில் மீண்டும் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது. ஏறத்தாழ 49 ஆயிரத்து 622 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் தொற்றுக்கு 29 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 64 ஆக பதிவாகி உள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, ஒடிசா, மகாராஷ்டிரா, டெல்லி, சத்தீஸ்கர், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பலி எண்ணிக்கை பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் ஆயிரத்து 527 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

தொற்று பரவும் தீவிரத் தன்மை நாளொன்றுக்கு 5 புள்ளி 1 சதவீதம் என்ற அளவிலும் வாரத்திற்கு 4 புள்ளி 29 சதவீதம் என்ற அளவிலும் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் பரவல் விகிதம் அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தினசரி பாதிப்பு எண்ணிக்கை உச்சம் தாண்டும் நிலையில் மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா என்ற அச்சம் நிலவுகிறது. முக கவசம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

மேலும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுமாறு, பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார். அடுத்த 10 முதல் 12 நாட்களில் நாட்டில் கரோனா பரவல் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.

ஒமிக்ரான் வைரசின் துணை மாறுபாடான XBB.1.16 வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாகவும் இந்த மாறுபாடு மீதான தடுப்பூசியின் செயல்திறன் குறித்து பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒமிக்ரான் திரிபு XBB.1.16 வைரசின் பரவல் தீவிரத்தன்மை சராசரியை விட குறைவாக இருப்பதாகவும் நாடு முழுவதும் மருத்துவமனைகளள் தயார் நிலையில் இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :ட்விட்டரில் புது வசதி அறிமுகம் - அதிலும் ட்விஸ்ட் கொடுத்த எலான் மஸ்க்!

ABOUT THE AUTHOR

...view details