தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுதந்திர தினம் - வங்கதேச எல்லையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் - இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வங்கதேச எல்லையில் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Border Security Force
Border Security Force

By

Published : Aug 15, 2021, 1:42 PM IST

நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா, இந்தியா-வங்கதேச எல்லைப் பகுதியில் கொண்டாடப்பட்டது. அப்போது இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு வீரர்களும் இனிப்பு வழங்கி தங்கள் மகிழச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்தி, அமைதியை நிலைநாட்ட வீரர்கள் உறுதியேற்றதாக எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

எல்லைப் பகுதியில் இரு நாட்டின் சுதந்திர தினத்தன்றும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவிப்பது நீண்ட மரபாக உள்ளது.

இந்தாண்டு மார்ச் மாதம் 26ஆம் தேதி வங்கதேசத்தின் 50ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்தியாவிலிருந்து வங்கதேசம், மியான்மருக்கு ரயில் சேவை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாக இன்றைய சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதையும் படிங்க:சிறு விவசாயிகளை வலுப்படுத்த வேண்டிய நேரமிது - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details