தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்பை சாப்ரா ஹவுஸில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு! - தீவிரவாதம்

புனேவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்ட புகைப்படங்களை கைப்பற்றிய நிலையில், மும்பை சாப்ரா ஹவுஸில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை
mumbai

By

Published : Jul 30, 2023, 10:57 AM IST

மும்பை: கடந்த 2008ஆம் நவம்பர் மாதம் 26ம் தேதி அன்று மும்பையில் தாஜ் ஹோட்டல் அருகில் உள்ள சாப்ரா ஹவுஸ் பயங்கரவாதிகளால் சூறையாடப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர். பின்பு தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சில நாட்களுக்கு முன்பு முகமது இம்ரான் முகமது யூனுஸ் கான் மற்றும் முகமது யூனுஸ் முகமது யாகூப் சாகி ஆகியோரை புனே போலீஸிடம் இருந்து விசாரணைக்காக காவலில் எடுத்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ரத்லாம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இந்த வழக்கின் விசாரணையின்போது அவர்களிடம் இருந்து சாப்ரா ஹவுஸின் கூகுள் புகைப்படங்களை போலீசார் கைப்பற்றினர். இதன் அடிப்படையில் மீண்டும் பயங்கரவாதிகள் சாப்ரா ஹவுஸை குறிவைத்திருக்கலாம் எனவும், இவர்கள் சாப்ரா வீட்டில் சோதனை நடத்தியிருக்கலாம் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனவே, மீண்டும் குலாப்யாவில் உள்ள சாப்ரா ஹவுஸ் பயங்கரவாதிகளால் சூறையாடப்பட வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் தகவலுடனும் மும்பை போலீசார் குலாப்யாவில் உள்ள சாப்ரா ஹவுஸ் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். இவர்கள் தற்போது மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு காவலில் உள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:எல்லாமே இலவசம்!... நீங்க வந்தா மட்டும் போதும்... சென்னை மாநகராட்சியின் அதிரடி வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details