லூதியானா:பஞ்சாபில் அண்மைக்காலமாக கால்நடைகளுக்கு லம்பி ஸ்கின் நோய் என்ற வைரஸ் நோய் தாக்குதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் போனா வைரஸ் (bona virus) என்ற புதிய வைரஸ் தாக்குதல் தொடங்கியுள்ளது. இந்த போனா வைரசால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. லம்பி ஸ்கின் நோயைத் தொடர்ந்து, இந்த போனா வைரஸ் விவசாயிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நோய் தொடர்பாக தாவர நோய்கள் நிபுணர் மந்தீப் ஹுஞ்சன் கூறுகையில், "போனா வைரஸ் நோய் பஞ்சாபின் கடற்கரைப்பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சட்லஜ் நதி அருகே உள்ள பகுதிகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஹோஷியார்பூர், பாட்டியாலா, ஃபதேகர் சாஹிப், ரோபர் மற்றும் லூதியானா ஆகிய பகுதிகளில் வைரஸ் பரவல் காணப்படுகிறது. இப்பகுதிகளில் அனைத்து வயல்களிலும் பாதிப்பு ஏற்படவில்லை. 5 முதல் 7 சதவீத நெற்பயிர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் நெற்பயிர்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி, வளர்ச்சியை தடுக்கிறது.