புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை முதலமைச்சர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வெளியிட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தேர்ச்சி விழுக்காடு 96.13 சதவீதம். கடந்த முறையை விட இது 4.81 சதவீதம் கூடுதலாகும்.14 ஆயிரத்து 423 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 13 ஆயிரத்து 865 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றார்.
68 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் இரண்டு அரசு பள்ளிகள் அடங்கும். கடந்த ஆண்டை விட அரசு பள்ளிகள் 10 விழுக்காடு கூடுதல் தேர்ச்சியை பெற்றுள்ளன, பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளும் உயர்கல்வி படிக்கும் அளவிற்கு அரசு கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் உருவாக்கி கொடுக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி என்றார்.