கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள தொடுபுழாவில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மணமகனின் நண்பர்கள் நான்கு இளைஞர்கள் தொடுபுழா வந்திருந்தனர்
பின்னர், அவர்கள் அருகிலுள்ள மலங்கரை அணையின் நீர்த்தேக்கப்பகுதியில் குளிப்பதற்காகச் சென்றனர். குளித்துக்கொண்டிருந்தபோது நீரின் ஆழமான பகுதிக்கு நண்பர்களின் ஒருவரான ஃபிர்தேஸ் என்ற இளைஞர் சென்று மாட்டிக்கொண்டார்.
உயிருக்குப் போராடிய நிலையில் இதனைக் கண்ட மற்றொரு நபரான அமன் ஷாபு என்பவர், அவரை காப்பாற்றச்சென்றபோது அவரும் ஆழமான பகுதிக்குச்சென்று மாட்டிக்கொண்டார். இவர்கள் இருவரும் உயிருக்குப் போராடியதைக் கண்ட மற்ற இரண்டு நண்பர்கள் கூச்சலிடவே இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.