சென்னை: பெண்கள் பொதுவாக வெளியில் செல்லும் பொழுது அவர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வதற்கு ஹேண்ட் பேக் (Hand Bag) எடுத்து செல்வது வழக்கம். அந்த வகையில் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் அவர்களின் ஹேண்ட் பேகில் (bag) எடுத்து செல்ல வேண்டிய முக்கியமான பொருள்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
- சானிட்டரி பேடுகள்(sanitary napkin):வெளியில் செல்லும் பொழுது சானிட்டரி பேடுகள் கண்டிப்பாக பையில் எடுத்து செல்ல வேண்டும். ஏனெனில், சில நேரங்களில் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் பீரியட்ஸ் (periods) வர வாய்ப்பு உள்ளது. எனவே முன்னெச்சரிக்கையாக சானிட்டரி பேடுகள் உங்கள் பையில் கட்டாயம் இருக்க வேண்டும்.
- பணம் (money) : சமீப காலங்களில் வேலைக்கு மற்றும் கல்லூரிக்குச் செல்லும் பெண்கள் கார்டுகள் மற்றும் UPI பேமெண்ட்களையே அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். 5 ரூபாய்க்கு பொருள் வாங்கினாலும் அவற்றிற்கான பணத்தை UPI மூலமாகவே செலுத்துகின்றனர். இதனால் அவர்கள் கைகளில் பணம் வைத்திருக்கும் பழக்கம் குறைந்துள்ளது. சில சமயங்களில் பேருந்துகளில் டிக்கெட் எடுக்க பணமில்லாமல் மற்றவர்களிடம் கேட்கும் சூழலும் உள்ளது. எனவே அதிகளவு பணத்தை எடுத்து செல்லவில்லை என்றாலும் அவசரத் தேவைகளுக்காக குறிப்பிட்ட தொகையை உங்கள் பையில் வைத்திருக்க வேண்டும்.
- அடையாள ஆவணங்கள்: வாகனங்களை ஓட்டுபவர்கள் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருப்பது போன்று பெண்களும் வெளியில் செல்லும் பொழுது அவர்களின் பைகளில் ஆதார் மற்றும் பான் கார்டு போன்ற சில அடையாளச் சான்று ஆவணங்களின் நகல்களை உங்களுடன் எடுத்து செல்ல வேண்டும். ஏனெனில், அவசரகாலங்களில் அவை உங்கள் குடும்பத்தை அணுக உதவும்.
- உணவு பொருள்கள்:முக்கியமாக சிறிய தண்ணீர் பாட்டிலையாவது உங்கள் பையில் வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் சோர்வாக அல்லது மந்தமாக உணரும் பொழுது ஒரு பாட்டில் தண்ணீர் இருப்பது பயனுள்ளதாக இருக்கும். சாக்லேட் மற்றும் பிஸ்கெட் பாக்கெட்டுகளை எப்பொழுதும் உங்கள் பையில் வைத்துக் கொள்ளுங்கள். பசி உணர்வு ஏற்படும் பொழுது இவற்றை சாப்பிடுவதன் மூலம் பசியைக் கட்டுப்படுத்த இயலும். மேலும், வெயில் மற்றும் மழை காலம் எதுவாக இருந்தாலும் எப்பொழுதும் குடையை உங்கள் பையில் வைத்திருப்பது நல்லது.
- சார்ஜர்: நாம் மறக்காமல் கொண்டு செல்லும் பொருள்களில் ஒன்று நம்முடைய கைபேசி (mobile). ஆனால், கைபேசியை மட்டும் கொண்டு செல்வது போதுமானதா? ஏனென்றால், சில நேரங்களில் கைபேசியில் உள்ள சார்ஜ் குறைந்து அவை ஸ்விட்ச் ஆஃப் ஆகும் நிலையும் ஏற்படும். எனவே, பாதுகாப்பு கருதி கைபேசியுடன் பவர் பேங்க் மற்றும் போர்ட்டபிள் சார்ஜரும் அவசியம் எடுத்து செல்ல வேண்டும்.