தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட்: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டிற்கு நவம்பர் 10ஆம் சிவப்பு எச்சரிக்கை (Red alert) விடுக்கப்பட்டுள்ளது. அன்று மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMD issues Red Alert
IMD issues Red Alert

By

Published : Nov 8, 2021, 3:58 PM IST

Updated : Nov 8, 2021, 4:04 PM IST

டெல்லி: இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வங்காள விரிகுடாவில் 9ஆம் தேதி உருவாகும் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 11ஆம் தேதி காலை வட தமிழ்நாடு கடலோரப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாக உள்ளது. இதனால், தமிழ்நாடு, ஆந்திரா, ஏனாம் பகுதிகளில் நவம்பர் 10, 11ஆம் தேதிகளில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இதன்காரணமாக, நவம்பர் 10ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை (Red alert) விடுக்கப்படுகிறது. எனவே மீனவர்கள் 9ஆம் தேதிக்குள் திரும்ப வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறலாம் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் வெள்ளம் ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சென்னையில் தொடர்ந்து 2 நாள்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு

Last Updated : Nov 8, 2021, 4:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details