தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பருவமழை முன்கூட்டியே தொடங்குகிறது - இந்திய வானிலை மையம்! - டெல்லி

டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த சில நாள்களுக்கு வெப்பநிலை குறையும் என்றும், அந்தமானில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

IMD
IMD

By

Published : May 16, 2022, 7:36 PM IST

நாடு முழுவதும் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. இன்று (மே 16) வெப்பநிலை சற்று குறைந்தது. டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பநிலை 2 முதல் 3 செல்சியஸ் வரை குறைந்து காணப்பட்டது.

இது பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாள்களில் வெப்பநிலை மேலும் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்றும், இனி வரும் நாள்களில் தெற்கு அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் காற்று அதிகரித்து காணப்படும் என்றும், அப்பகுதிகளில் பருவமழை தொடங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமானில் வழக்கமாக மே 22ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும், ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளது என்றும், அதேபோல் கேரளாவில் வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி பருவமழை தொடங்கும், இந்த ஆண்டு ஒரு வாரம் முன்கூட்டியே தொடங்கவுள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நம்ம "ஹீரோ பேனா"-க்களை பாதுகாத்து வரும் ஹீரோ...!

ABOUT THE AUTHOR

...view details