தின்சுகியா(அசாம்): அசாம் மாநிலத்தின் டின்சுகியா மாவட்டத்திலுள்ள மகும் கலபார் பகுதியிலுள்ள மசூதியில் இன்று (நவ.5) அதிகாலை தாஜிப்பூர் இஸ்லாம் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இமாம் சில மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை சம்பவத்தில் உயிரிழந்த இமாம் என்பவர் பீகாரைச் சேர்ந்தவர் என அப்பகுதி மக்கள் தெரியவருகிறது. இன்று அதிகாலை 4 மணியளவில் தாஜிப்பூர் இஸ்லாம் மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்த போது, இமாம் தொழுகையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அவருக்குப் பின்னால் இருந்தவர், அவரை கூர்மையான ஆயுதம் கொண்டு திடீரென தாக்கியுள்ளனர்.
மசூதியில் இமாம் கொலை:இதில் சம்பவ இடத்திலேயே இமாம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மக்கும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அங்கு வந்த காவல் துறையினர் சம்பவ இடத்தில் இமாமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இருவர் கைது: மசூதியில் நடைபெற்ற கொலை சம்பவம் குறித்து தின்சுகியா துணைக்காவல் கண்காணிப்பாளர் பிபாஷ் தாஸ் தலைமையில் மக்கும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். மேலும், கொலையில் தொடர்புடையவர்கள் என்று இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதிகாலையில் இஸ்லாமியர்கள் தொழுகை மேற்கொள்ளும் மசூதியில் இமாம் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை அறிந்த பலரும் அங்கு திரண்டனர். மேலும், அங்கு திரண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். அப்போது, தின்சுகியா துணைக் காவல் கண்காணிப்பாளர் பிபாஷ் தாஸ் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் மசூதியில் நடைபெற்ற கொலை சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அப்பகுதியிலுள்ள இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட பலரும் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:நீட் தேர்வுக்கு பயிற்சி தருவதாகக் கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை...! நடந்தது என்ன?