தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

27 கோடி ஏழை மக்களுக்கு இலவச கோவிட்-19 தடுப்பூசி: ஐ.எம்.ஏ வலியுறுத்தல்!

நாட்டின் 27 கோடி மக்களுக்கு மத்திய அரசு கோவிட்-19 தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என இந்திய மருத்துவ கழகம் வலியுறுத்தியுள்ளது.

Covid vaccine
Covid vaccine

By

Published : Feb 14, 2021, 9:13 AM IST

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் ஆகிய தடுப்பூசிகள் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்பாக இந்திய மருத்துவ கழகத்தின் தலைவர் ஜே.ஏ. ஜெயலால் ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்தியேகமாக பேட்டியளித்தார். அரசு முதற்கட்டமாக மூன்று கோடி பேருக்கு இலவச தடுப்பூசி வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. அதேவேளை நாட்டின் 27 கோடி மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் அரசு இலவச தடுப்பூசி வழங்கவேண்டும் என இந்திய மருத்துவ கழகம் வலியுறுத்துகிறது. கோவிட்-19 தடுப்பூசிக்காக மத்திய அரசு பட்ஜெட்டில் ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. அந்த தொகையை பின்தங்கிய 27 கோடி மக்களுக்காக செலவிட வேண்டும். நாட்டின் சுகாதார கட்டுமானத்திற்கு இது முக்கிய பங்களிப்பாக அமையும் என்றார்.

இதையும் படிங்க:நிவர், புரெவி புயல்களின் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.286.91 கோடி கூடுதல் நிதியுதவி

ABOUT THE AUTHOR

...view details