இந்தியா பாகிஸ்தான் எல்லை மற்றும் ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு குறித்து எல்லைப் பாதுகாப்பு படையின் தலைவர் ராஜா பாபு சிங் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, 2021ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் எல்லையில் அமைதி நிலவியது.
இருப்பினும் உளவுத்துறை அளித்த தகவலின்படி, எல்லைப் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஊடுருவ தயார் நிலையில் உள்ளனர். காஷ்மீர் எல்லையில் சுமார் 96 கிமீ தூரத்தை எல்லைப் பாதுகாப்பு படை பாதுகாக்கிறது.
காஷ்மீரில் இதுவரை ட்ரோன் தாக்குதல் நடைபெற்றதில்லை. அதேவேளை, இதற்கான அபாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆப்கனில் தலிபான் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளதையும் கூர்ந்து கவனித்துதான் வருகிறோம்.
கடந்த ஓராண்டில் ரூ.88 கோடி மதிப்புள்ள 17.3 கிலோ ஹெராயின் போதைப்பொருள் எல்லைப் பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை பஞ்சாப் மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது.
இதையும் படிங்க:Omicron BA-2 உருமாறிய வைரஸ்: இந்தூரில் குழந்தைகள் உள்பட 16 பேருக்கு பாதிப்பு