தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதன் காரணமாக, கோவிட்-19 பாதிப்புக்குள்ளான நோயாளிகள் உயிரிழக்கும் நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
பல இடங்களில் ஆக்சிஜன் விநியோகம் தடுக்கப்படுவதாகப் புகார் எழும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக டெல்லி மகாராஜா ஆக்ராசென் மருத்துவமனை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
இதை விசாரித்த நீதிபதிகள் விபின் சங்கி, ரேகா பள்ளி ஆகியோர் கொண்ட அமர்வு, ஆக்சிஜன் விநியோகத்தைத் தடுக்கும் யாரும் தப்ப முடியாது. மீறி யாராவது தடுத்தால் அவர்களைத் தூக்கிலிடுவோம்.
இதுபோன்ற குற்றத்தைச் செய்பவர் மீது மத்திய-மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய அரசு தெரிவித்த ஆக்சிஜன் டெல்லிக்கு எப்போது கிடைக்கும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க:1 ரூபாய்க்கு உயிர்காற்று: உ.பி. தொழிலதிபரின் தயாள குணம்