தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டு செயலிழப்பு! - ராணுவ சிறப்பு குழுவினர் IED வகை குண்டு என உறுதி

ராஜோரி சாலையில் அமைந்துள்ள சாவா கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான பொருளை பரிசோதித்த ராணுவ சிறப்பு கூட்டுக்குழுவினர் IED வகை குண்டு என உறுதி செய்தனர். பின், அதே குழுவினரால் செயல் இழப்பு செய்யப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டு செயலிழப்பு!
ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டு செயலிழப்பு!

By

Published : Apr 16, 2022, 7:54 PM IST

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ரஜோரி-குர்தான் சாலையில் உள்ள சாவா கிராமத்தில் சந்தேகம் அளிக்கும் வகையில் சிலர் நடமாட்டம் இருப்பதாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து ராணுவ சிறப்பு கூட்டுக்குழுவினர் இன்று (ஏப்ரல் 16) சாவா கிராமத்தில் சோதனை நடத்தினர். அவர்கள் நடத்திய சோதனையில் சந்தேகப்படும்படியாக இருந்த பொருள் சாலையில் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

அந்தப் பொருளை சோதித்த ராணுவத்தினர் அது IED ரக குண்டு என உறுதி செய்தனர். உடனடியாக அந்த குண்டை செயலிழக்க செய்தனர். இதன் மூலம் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டதாக அருகில் இருந்த காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும் அந்த வெடி குண்டு பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. காவல் துறையினர் அந்த வெடிகுண்டு குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:சாப்பாட்டில் உப்பு அதிகம் - மனைவியை கொன்ற கணவர்...!

ABOUT THE AUTHOR

...view details