அண்மையில் மத்திய அரசு நாட்டைப் பாதுகாக்கும் முப்படைகளில் பயிற்சியுடன் 4 ஆண்டுகள் பணியாற்ற அக்னிபத் எனும் திட்டத்தை அறிவித்தது. இதில் 17 அரை வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விமானப்படையில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. indianairforce.nic.in, careerindianairforce.cdac.in, agnipathvayu.cdac.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
முப்படைகளில் 13 லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் பணியாற்றும் நிலையில், வீரர்களின் சராசரி வயதைக் கணக்கிடுகையில் அது 32ஆக உள்ளது. அதை 26ஆக ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மாற்றும் நடவடிக்கையாக அக்னிபத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
முதல் ஆண்டில் அக்னி வீரர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது ஆண்டில் 33ஆயிரம் ரூபாயும், மூன்றாவது ஆண்டில் 36 ஆயிரத்து 500 ரூபாயும், 4ஆவது ஆண்டில் 40 ஆயிரம் ரூபாயும் மாதச்சம்பளமாக வழங்கப்படும். 4 ஆண்டுகள் இறுதியில் அக்னி வீரர்கள் விடுவிக்கப்படும்போது 11.71 லட்சம் ரூபாய் சேவா நிதியாக அவர்களுக்கு வழங்கப்படும். அதற்கு அக்னி வீரர்கள் வருமான வரி செலுத்த வேண்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அக்னிபத் வீரர்களுக்கு எவ்வளவு நாட்கள் பயிற்சி வழங்கப்படும்? - விவரம் உள்ளே!