டெல்லி:குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவில் பாஜக 152 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறது. பாஜகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதுகுறித்து பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த வரலாற்று வெற்றிக்காக குஜராத் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு தலைவணங்குகிறேன்.
அதேபோல, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், பாஜக மாநில தலைவர் சிஆர் பாட்டீல் மற்றும் குஜராத் மாநில பாஜக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். வெற்றிக்காக பொய்யான வாக்குறுதிகள் கொடுக்கும் துரோக அரசியவாதிகளை குஜராத் நிராகரித்துள்ளது.