தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'என்னை கட்டாயப்படுத்தி திருநங்கையாக மாற்றிவிட்டார்கள்..!' - திருநங்கையின் திடுக்கிடும் புகார்! - திருநங்கை குற்றாஞ்சாட்டு

தன்னை கட்டாயப்படுத்தி திருநங்கையாக சிலர் மாற்றியதாக திருநங்கை ஒருவர் புகார் அளித்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’என்னை கட்டாயப்படுத்தி திருநங்கையாக மாற்றிவிட்டார்கள்..!’ - திருநங்கையின் திடுக்கிடும் புகார்
’என்னை கட்டாயப்படுத்தி திருநங்கையாக மாற்றிவிட்டார்கள்..!’ - திருநங்கையின் திடுக்கிடும் புகார்

By

Published : Jul 26, 2022, 8:36 PM IST

மஹாராஷ்டிரா(சோலப்பூர்): ஏறத்தாழ 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருநங்கைகள் சோலப்பூர் நகரத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் நகரங்களின் ஆங்காங்கே உள்ள பகுதிகளில் பணம் கேட்டு வருவதைப்பார்க்க முடியும்.

இந்நிலையில், இந்த நகரத்தைச் சேர்ந்த ஓர் திருநங்கை, தன்னை கட்டாயப்படுத்தி திருநங்கையாக மாற்றிவிட்டதாக திடுக்கிடும் புகார் ஒன்றை அளித்துள்ளார். மேலும், தன்னை தினம்தோறும் அடித்துத் துன்புறுத்தியதாகவும், தன்னிடம் சிலர் பணம் பறித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட திருநங்கை கூறுகையில், “எனக்கு 26 வயது ஆகிறது. நான் கடந்த 6 ஆண்டுகளாக திருநங்கையாக வாழ்ந்து வருகிறேன். நான் கட்டாயப்படுத்தப்பட்டுத் தான் என் பாலினத்தை மாற்றம் செய்து கொண்டேன்.

நான் நகரப்பகுதிகளில் சேலை கட்டிக்கொண்டு பிச்சை எடுத்து சோலப்பூரில் உள்ள சதான்சன் நகரில் வாழ்ந்து வருகிறேன். நான் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் என்னை பாலினமாற்றம் செய்த நபர்கள் அபகரித்துக்கொள்கிறார்கள்.

புனேவில் உள்ள என்னை ஓர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று எனக்கே தெரியாமல், எனக்கு திருநங்கையாக மாற்றும் அறுவை சிகிச்சை செய்துவிட்டார்கள். என்னோடு சேர்த்து பல திருநங்கைகள் இப்படி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இப்படி பாதிக்கப்படும் காணொலி திருநங்கைகளின் வாட்ஸ்அப் குரூப்பில் வெளியிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், இது குறித்து காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை’’ என்றார்.

இதையும் படிங்க: திருநெல்வேலியில் ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவன் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details