நாம்பள்ளி (தெலங்கானா): தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தின் நாம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் தரைத்தளத்தில், இன்று (நவ.13) காலை கார் பழுது பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக கார் பற்றி எரியத் தொடங்கி உள்ளது. இதனையடுத்து, அங்கு இருந்த டீசல் மற்றும் ரசாயனம் அடங்கிய டிரம்களிலும் தீ பரவத் தொடங்கியது. இதனையடுத்து, அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் வரத் தொடங்கி உள்ளது.
ஹைதராபாத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து - 7 பேர் உயிரிழப்பு! - ஹைதராபாத் தீ விபத்து
Hyderabad Apartment fire accident: ஹைதராபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் தரைத்தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
Published : Nov 13, 2023, 12:07 PM IST
இதனைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ஹைதராபாத் பெருநகர மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும், மீட்புப் பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த விபத்தில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதையும் படிங்க:உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து - 40 பேரை மீட்கும் பணி தீவிரம்!