தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புவனேஸ்வரில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்! - புவனேஷ்வர்

கொல்கத்தாவிலிருந்து ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ விமான பயணிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், புவனேஷ்வரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அவரமாக தரையிறங்கிய விமானம்
அவரமாக தரையிறங்கிய விமானம்

By

Published : Oct 1, 2021, 7:17 AM IST

புவனேஷ்வர்: கொல்கத்தாவில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ விமானம் மருத்துவ அவசரநிலை காரணமாக பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஹைதராபாத் புறப்பட்ட விமானத்தில் பயணம் செய்த 59 வயது முதியவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவ அவசரநிலை காரணமாக விமானம் புவனேஸ்வருக்கு திருப்பி விடப்பட்டது.

மாலை 6 மணியளவில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஜெயப்ரதா கோஷ் எனபவருக்கு உடல்நிலை மோசமடைந்ததாக விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர். அவருடன் மூன்று குடும்ப உறுப்பினர்கள் பயணம் செய்துள்ளனர்.

புவனேஷ்வரில் விமானம் தரையிறங்கியவுடன், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவசர ஊர்தியில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் - சபாநாயகர் அப்பாவு கடும் எதிர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details