ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் கடந்த மாதம் வெடிகுண்டு வைக்கத் திட்டமிட்ட இரண்டு ஹைபிரிட் பயங்கரவாதிகள் பாரமுல்லாவில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு ரிமோட் கண்ட்ரோல்டு மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் சாதனங்களும் (IED - Improvised explosive device) காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள காஷ்மீர் மண்டல காவல்துறையினர், "கெனுசா பந்திபோராவில் சமீபத்தில் நடந்த IED குண்டுவெடிப்பு சம்பவத்தை சோபோர் காவல் துறையினர் முறியடித்துள்ளனர். கெனுசா பந்திபோராவை சேர்ந்த இர்ஷாத் கனே எனும் ஷாஹித் மற்றும் வசீம் ராஜா ஆகிய 2 ஹைபிரிட் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.