தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உடல் எடை கூடிவிட்டதால் மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கணவர்.. - பெண்மணி போலீசில் புகார்

மனைவி உடல் எடை கூடிவிட்டதால், கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

husband
husband

By

Published : Sep 1, 2022, 6:56 PM IST

மீரட்:உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் ஜாகிர் காலனியைச் சேர்ந்த நஸ்மா என்ற பெண், தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில், "எனக்கும் எனது கணவர் சல்மானுக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. எங்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்பு எனது கணவர் என்னை திடீரென வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டார். பிறகு, விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இதுதொடர்பாக கணவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது, நான் குண்டாகிவிட்டதால், என்னை விவாகரத்து செய்யப்போவதாக கூறினார்.

அதன்பிறகு பலமுறை பேச முயற்சித்தும் முடியவில்லை. இந்த விவாகரத்து நோட்டீசை நான் ஏற்க மாட்டேன். எனக்கு நீதி வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அஸ்ஸாமில் குழந்தையை கடத்த முயன்றதாக ஒருவர் அடித்துக் கொலை

ABOUT THE AUTHOR

...view details