தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: மே 26- இன்றைய ராசிபலன் - zodiac signs

TODAY HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரை12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை காணலாம்.

TODAY HOROSCOPE: மே 26- இன்றைய ராசிபலன்
TODAY HOROSCOPE: மே 26- இன்றைய ராசிபலன்

By

Published : May 26, 2022, 6:44 AM IST

மேஷம் :இன்று, நீங்கள் தனியாக இருந்தால் கூட, தனிமையாக உணர மாட்டீர்கள் .உங்கள் உள்ளுணர்வைக் கேட்டு, நடக்க விரும்புவீர்கள், உங்கள் மௌனத்தையும் புரிந்து கொள்ளக்கூடிய அன்பானவர்களோடு மாலை நேரத்தை செலவிடுவீர்கள். மாலையில் நல்ல செய்தி இல்லம் தேடி வரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமைவதற்கான அறிகுறி தெரியும்.

ரிஷபம் :இன்று, உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து, கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். நிதர்சனமான, புத்திசாலித்தனமான மனோபாவத்தை வளர்த்து கொள்ள முயற்சிக்க வேண்டும். பெருந்தன்மையுடனும் திறந்த மனதுடனும் இருக்க முயற்சிக்கவும். அது உங்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகளை தவிர்க்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் அனுசரித்து செல்லவும்.

மிதுனம் :இன்று,உங்களின் வேலை மற்றும் குடும்பத்திற்கும் இடையே நேரத்தை சமமாக ஒதுக்கி சிறப்பாக செயல்படும் நாளாக அமையும். உங்கள் வேலைப் பளு அதிகம் இருந்த போதிலும்,குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குவது உடன் சிறு பயணத்திற்கான ஏற்பாட்டையும் செய்வீர்கள். இந்த நாள் உங்கள் கனவுகள் நிறைவேறும் நன்னாளாக அமையும்.

கடகம் :இன்று, உங்களின் மன ஓட்டத்தை கட்டுப்படுத்துதல் அவசியம், இல்லை எனில் உங்களின் அருகில் இருப்பவர்களை அது பாதிக்கக்கூடும். எழுத்தாளர்களுக்கு சாதகமான நாளாக இன்று அமையும். கலைத்துறையில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இன்று உகந்த நாளாக அமையும். புதிய முயற்சிகள் செய்வதற்கு ஏற்ற நாளாக இந்நாள் அமையும்.

சிம்மம் :இன்று உங்கள் வாழ்க்கையின் ஒரு முக்கிய நாளாக இருக்கும். சொந்த வாழ்க்கை அல்லது வேலை தொடர்பான முக்கிய விஷயத்தை கவனமாக கையாண்டு, நாசூக்காக செயல்படவேண்டும். நடுநிலைமையை கடைபிடியுங்கள். இன்று சமூகத்தில் உங்கள் பெயர் உயர்ந்து ஊக்கத்தை கொடுக்கும்.

கன்னி :இன்று உங்கள் மனதில் யோசனைகள் பொங்கி வழியும். உங்கள் கடமைகளுடன், தற்போதைய வேலையை ஒப்பிட்டு குழம்புவீர்கள். புதிய தொடர்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தண்ணீரை விட ரத்தம் அடர்த்தியானது என்பதற்கு ஏற்ப, குடும்பத்தினரும், நண்பர்களும் மேலும் நெருக்கமாவார்கள்.

துலாம் :உங்கள் உயர்வான குணம் மற்றும் இளகிய மனதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பலர் முயற்சிப்பார்கள். சிறிய பிரச்சினைகள் பெரிதாக வளர்ந்து, உங்கள் இயல்பை மாற்றி, கோபத்தை அதிகரிக்கச் செய்யும். பண விவகாரங்களில் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம். உங்கள் மனதை நிலையாக வைத்துக் கொண்டால், இழந்த நிம்மதியை மீண்டும் பெறலாம்.

விருச்சிகம்:உங்கள் உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுத்தி உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் பருமனை தவிர்க்கவும். உங்களின் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறையால் உடல்நலக் குறைவு ஏற்படும். ஆரோக்கியமாக சாப்பிட்டு சந்தோஷமாக வாழவும். உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எண்ணம் மனதில் தோன்றும்.

தனுசு :உங்களின் சொந்த கருத்துக்களை மனதில் கொண்டு முடிவுகளை எடுப்பீர்கள்.உங்கள் பிரதிபலிப்பின் மூலம் உங்களின் பல்வேறு சிக்கல்களுக்கான காரணத்தை கண்டறிய முயல்வீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டாலும், விவேகமாக செயல்பட முயற்சி செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்சினை ஒன்று இன்று முடிவுக்கு வரும்.

மகரம்:இன்று உங்களுக்கு வேலைப்பளு அதிகம் இருந்த போதிலும், அது உங்களை பாதிக்காதவாறு நடந்து கொள்வீர்கள். உங்களுக்கான இலக்கை அமைத்து செயல்படுவதன் மூலம் வெற்றி அடைய பெறலாம். அலுவலகத்தில் பதவி உயர்வு தொடர்பான நல்ல செய்தி வரலாம். குடும்பத்தினருடன் இனிமையாக நேரத்தை கழிப்பீர்கள்.

கும்பம்:நீங்கள் அதிக வேகத்துடன் இலக்குகளை அடைய முற்பட்டாலும்,அது நிறைவேறாமல் போக வாய்ப்பு உள்ளது.நாளைய பொழுதில் மாற்றம் இருப்பதால், நம்பிக்கை இழக்க வேண்டாம். சிறிது நேரம் ஓய்வு எடுத்த புத்துணர்ச்சி பெற்று கொள்ளுங்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

மீனம்: இன்று ஒரு முக்கியமான நாள், வீட்டிலோ அல்லது பணியிடத்திலேயோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சாதனையை நீங்கள் செய்து முடிக்கலாம். உங்கள் தொழில்முறை மற்றும் சமூக அந்தஸ்த்தில் ஒரு படி முன்னேறுவீர்கள். அலுவலகத்தில் இருந்து நல்ல செய்தி வரும். புதிய வீடு கட்ட திட்டமிடுவீர்கள்.

இதையும் படிங்க:New Year 2022 Horoscope: அடுத்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ!

ABOUT THE AUTHOR

...view details