மேஷம்:இன்றைய தினம், பிரச்சினைகள் மிகுந்த நாளாக இருக்கும், சில விஷயங்களில், உங்கள் நண்பர்களின் கருத்துக்கு நீங்கள் ஒத்துப் போகவில்லை என்றாலும், அவருடன் இருப்பது உங்களுக்கு பிடிக்கும், நீண்டகாலமாக முடிக்கப்படாமல் இருந்த பணிகளை முடித்துவிட்டதால், நீங்கள் நிம்மதியாக உணர்வீர்கள்.
ரிஷபம்:இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களுக்கு சிறந்த நாளாக இருக்காது. நீங்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், உங்களால் பிரச்சினைகளையும், சிக்கல்களையும் தவிர்க்க இயலாது. உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முடிக்க உங்களுக்கு விருப்பம் இல்லாமல், ஒன்றும் செய்யாமல் வருத்தமாக உணர்வீர்கள். அதனால் கடினமான அல்லது சிக்கலான பணிகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். எளிமையான பணியில் கவனம் செலுத்துங்கள். இதுவும் கடந்து போகும் என்பதால் அமைதியாக, நேர்மறை எண்ணங்களை கொண்டிருப்பது நல்லது.
மிதுனம்:இன்று, நீங்கள் எந்தக் குறிக்கோளை நோக்கி செல்கிறீர்கள் என்பதில் உங்களுக்கு தெளிவு இருப்பதால், குறிக்கோளை அடைய இரட்டிப்பு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குதூகலம் மற்றும் உற்சாகம் அதிகம் இருப்பதால், இலக்குகளை எளிதாக அடைவீர்கள். உங்கள் உழைப்பிற்கு எதிர்பாராவிதமாக பலன்கள் கிடைக்கும். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும்.
கடகம்:உணர்வு ரீதியான விஷயங்களால், உங்கள் வெற்றிப் பாதையில் தடைகள் ஏற்படும். உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். இது வருங்காலத்தை பாதிக்கும். உங்களுடைய திறமையான பேச்சு மற்றும் பணிவான அணுகுமுறையால், மக்களின் மனதை கவர்வீர்கள்.
சிம்மம்:இன்றைய தினத்தில், அனைவரையும் அனுசரித்து ஒத்துழைப்புடன் பணியாற்றும் உங்களது மனப்பான்மையின் காரணமாக, மற்றவர்கள் உங்களை விரும்புவார்கள். இன்று நீங்கள் சந்திக்கும் நபர்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வீர்கள். உங்களைப் போன்ற ஒத்த மனநிலை கொண்டவர்களையும் நீங்கள் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.
கன்னி:இன்றைய தினத்தில், நீங்கள் சந்திக்கும் நிதி தொடர்பான சவால்களை சந்திக்க ஆவலாக இருப்பீர்கள். இது உங்களது, வெற்றி பெற வேண்டும் என்று ஆர்வம் காரணமாகும். பிரச்சினைகளைத் தீர்க்க புதுமையான கருத்துக்கள் மற்றும் வழிமுறைகளை ஏற்படுத்துவீர்கள். உங்களுடைய தற்போதைய வர்த்தக யோசனைகள், சிறப்பான பலன்களை அளித்து ஆச்சரியங்களை அளிக்கும்.