புதுச்சேரி குடிமை வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணகுமார், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கூட்டாக சட்டப்பேரவை அறையில் செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், "புதுச்சேரி மாநிலத்தில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறக்கவும், ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்க வலியுறுத்தி மத்திய அமைச்சர்களை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான கோப்புகளை தயார் செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .
அதுமட்டுமின்றி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து இதுகுறித்து பேசப்பட்டது. அடுத்தவாரம் உள்துறை அமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட பாஜக கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளனர். சிறுபான்மை மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி சுமுகமாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கட்சி பின்னே நிற்கும் - விஜயபாஸ்கர் விவகாரத்தில் அதிமுக அறிக்கை