ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஸ்த்வார் மாவட்டத்தில் இந்திய ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் காவலர்கள் இணைந்து நடத்திய சோதனையில் ஹிஸ்புல் முஜாஹுதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி முசாமில் ஹுசைன் ஷா பிடிபட்டார்.
அங்குள்ள குல்னா காடுகள் பகுதியில் பதுங்கியிருந்த அவரை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் அவரிடமிருந்து கையெறி குண்டுகள், 12 துப்பாக்கிகள், இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் உள்ளிட்ட பல ஆயுதங்களை கைப்பற்றினர்.