தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 6, 2021, 10:36 AM IST

Updated : Dec 6, 2021, 11:08 AM IST

ETV Bharat / bharat

இந்தியாவில் இந்துக்கள் விரைவில் சிறுபான்மையினராக மாறுவர் - தொகாடியா கவலை

ஒரு தம்பதிக்கு இருவர் என்ற, நாட்டின் மக்கள் தொகை விகிதத்தின் அறிக்கை முடிவு குறித்து கவலை தெரிவிக்கும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா, இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்துவருகிறது. இந்துக்கள் சிறுபான்மையினராக மாறிவிடும் கவலை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

Praveen Togadia
Praveen Togadia

வாரணாசி:மத்திய அரசு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மக்கள் தொகை தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் தம்பதிக்கு இருவர் என்று அந்த அறிக்கையின் வாயிலாகத் தெரியவருகிறது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த பிரவீன் தொகாடியா, "இஸ்லாமியர் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.5 ஆக உள்ளது. அதே சமயம் இந்துக்களின் மக்கள் தொகை குறைந்துவருகிறது. இஸ்லாமியர் மக்கள் பெருக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்துக்கள் சிறுபான்மையினராக மாறும் ஆபத்து அதிகமாகியுள்ளது" என்பதைச் சுட்டிக் காட்டினார்.

வரலாற்றில் இந்தியாவில் இதுதான் முதல்முறை!

மேலும் அவர் கூறுகையில், "இன்றைய நிலைமையில் இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி 140 கோடியாக உள்ளது. இன்னும் 10-20 ஆண்டுகளில் இந்த மக்கள் தொகையே இருக்கும் என்பது அந்த அறிக்கையின் வாயிலாகத் தெரியவருகிறது. இருப்பினும் இந்த மக்கள் தொகை நிலைத்தன்மை நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லது என்றாலும், அறிக்கையின்படி இந்துக்களின் மொத்த வளர்ச்சி விகிதம் என்பது 1.8 விழுக்காடாக இருப்பது கவலை அளிக்கிறது" என்றார்.

மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டத்தை அரசு விரைவில் இயற்ற வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். "மக்கள் தொகை வளர்ச்சி அறிக்கையின்படி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர் இந்து மக்கள் தொகை வளர்ச்சி குறையும். 1980ஆம் ஆண்டு இந்து மக்கள் தொகை 70 கோடியாக இருந்தது. ஆனால் தற்போதைய நிலைமை ஏதோ சுமார் 100 கோடியாகத்தான் உள்ளது.

ஆனால் தற்போது அது நூறிலிருந்து 90, 80, 70, 60 எனத் தலைகீழாகக் குறையும்" எனவும் தொகாடியா குறிப்பிடுகிறார். மேலும் அவர் குறிப்பிடுகையில், 20 ஆண்டுகளில் ஐரோப்பாவில் கிறிஸ்தவ மக்கள் தொகையும் குறைந்துவருகிறது. ஆனால் வரலாற்றில் இதுபோல இந்தியாவில் குறைந்துவருவது இதுதான் முதல்முறை என்பதையும் அவர் கோடிட்டுக் காட்டுகிறார்.

மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து அரசுக்கு கடிதம் எழுத உள்ளீர்களா என்று கேட்டதற்கு பிரவீன் தொகாடியா, "இதைப் பற்றி மக்கள் மூலமாகவும், பெகாசஸ் வாயிலாகவும் அரசு அறிந்துகொள்ளும். இது குறித்து தனியாகச் சொல்வதற்கான தேவை இருக்காது" பதிலளித்தார்.

இதையும் படிங்க: அம்பேத்கர் நினைவு நாள்: ராம்நாத், மோடி மரியாதை

Last Updated : Dec 6, 2021, 11:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details