தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விபத்தை தவிர்க்கும் விஷேச ஹெல்மெட் - பள்ளி மாணவி கண்டுபிடிப்பு! - இமாச்சல பிரதேசம்

டெல்லியில் இளம்பெண் காரில் 12 கிலோ மீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், வருங்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி விஷேச ஹெல்மெட்டை உருவாக்கி ஆச்சரியமடையச் செய்துள்ளார்.

ஹெல்மட்
ஹெல்மட்

By

Published : Jan 6, 2023, 10:26 PM IST

ஹமிர்பூர்: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது டெல்லியில் இளம்பெண் அஞ்சலி கார் விபத்தில் சிக்கி 12 கிலோ மீட்டர் தூரம் அதே காரால் தரதரவென இழுத்துச்செல்லப்பட்டு கோரமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கியது.

இந்த சம்பவத்தை அடுத்து பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன. இரு சக்கர வாகன விபத்தில் சிக்கும் பெரும்பாலானோர் கவனக் குறைவின்மையால் விபத்தில் மாட்டிக் கொள்கின்றனர்.

மேலும் பெரும்பாலான விபத்துகள் நேர்ந்த பின், நிகழ்ந்த பின் உதவியோ, அல்லது விபத்து குறித்த தகவல் பகிர்வோ தாமதமாவதால் பல்வேறு சிக்கல்கள் உருவாகின்றன. இதை தீர்க்கும் வகையில் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி விஷேச சாதனத்தை உருவாக்கி உள்ளார்.

சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ரிதிமா, விபத்தில் சிக்கிக் கொள்பவர்களை தற்காக்கும் வகையிலான ஸ்மார்ட் ஹெல்மெட்டை உருவாக்கி உள்ளார். இமாச்சலப்பிரதேசத்தில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான கண்காட்சி போட்டியில் மாணவியின் ஸ்மார்ட் ஹெல்மெட் கண்டுபிடிப்பு காட்சிப்படுத்தப்பட்டது.

ஸ்மார்ட் ஹெல்மட்டில் அதிநவீன சென்சார் கொண்ட கேமரா லோகேஷன் டிராக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணத்தின்போது ரைடர் ஹெல்மெட் அணியத் தவறினாலும், அல்லது முறையாக அணிய மறந்தாலும், சென்சார் சத்தம் கொடுத்து ஓட்டுநரை எச்சரிக்கும். இதனால் பெருவாரியான விபத்துகள் தவிர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டுள்ள பிரஸ்சர் பிளேட்(pressure plate) எனப்படும் உயர் அழுத்த தொழில்நுட்பம் விபத்தின்போது தரையில் ஹெல்மெட் விழுந்தாலோ, அல்லது ஏதாவது ஒரு பொருளின் மீது மோதினாலோ, கருவியில் பொருத்தப்பட்டுள்ள சிம் கார்டு மூலம் விபத்துக்குள்ளானவரின் நண்பருக்கோ, உறவினர்களுக்கோ, குடும்பத்தினருக்கோ தகவல் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டுள்ள விஷேச பொத்தானை விபத்தில் சிக்கிக் கொண்டவர் அழுத்தினால் அடுத்த 2 விநாடிகளில் அவர் விபத்துக்குள்ளான தகவல் மற்றும் லைவ் லோகேசன் அவரது குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தியாக செல்லும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட்டில் உள்ள அர்டினோ (Arduino) தொழில்நுட்பம் விபத்து ஏற்படும் போது மூளையின் அசைவுகளை உடனடியாக சென்சார் மூலம் உணர்ந்து, பிரஸ்சர் பிளேட் மூலம் விபத்துக்குள்ளானவரின் குடும்பத்திற்கு தானாகவே தகவல் அனுப்பும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் ஹெல்மெட் தயாரிக்க 8ஆயிரம் ரூபாய் செலவானதாகத் தெரிவித்த மாணவி ரிதிமா தாக்கூர், சந்தைக்கு ஸ்மார்ட் ஹெல்மெட் விற்பனைக்கு வரும் போது 3 ஆயிரம் ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படும் என்றார். மேலும் தன் தாய்க்கு ஏற்பட்ட விபத்தில் இருந்து இது போன்ற ஸ்மார்ட் ஹெல்மெட் தயாரிக்கும் எண்ணம் தோன்றியதாக ரிதிமா தாக்கூர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:டெல்லி மாநகராட்சி: ஆம் ஆத்மி - பா.ஜ.க உறுப்பினர்கள் கைகலப்பு - அவை ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details