டெல்லி: டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. டெல்லி நகரம் முழுவதும் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சூறைக்காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக டெல்லியில் விமான சேவை பாதிக்கப்பட்டது.
டெல்லியில் இடியுடன் கூடிய கனமழை - விமானப்போக்குவரத்து பாதிப்பு! - அடுத்த சில மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை தொடரும்
டெல்லியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அடுத்த சில மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
விமானங்கள் ரத்து தொடர்பாக பயணிகள் சம்மந்தப்பட்ட விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளும்படி டெல்லி விமான நிலையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, அடுத்த சில மணி நேரங்களில் டெல்லி மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கல்யாண விருந்து நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட 300 பேருக்கு ஒவ்வாமை!