டெல்லி: வடமேற்கு மாநிலங்களில் கடந்த வாரம் முதல் வெப்பநிலை மிகவும் மோசமாக வாட்டி வதைக்கிறது. அதிகபட்சமாக 43.7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை (17-4-2022) முதல் 19ஆம் தேதி வரை வெப்பம் அதிகமாக காணப்படும் என்றும், பஞ்சாப், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் நாளையும், நாளை மறுநாளும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.