குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியில் விவசாயிகள் ஈடுபட்டபோது, தடுப்பான்கள் மீது டிராக்டர் மோதி கவிழ்ந்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உயிரிழந்த விவசாயி நவரீத் சிங்கின் தாத்தா, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், "எனது பேரன் தலையில் குண்டு பாய்ந்ததற்கான தடயங்கள் இருந்தன” என குறிப்பிட்டிருந்தார்.
டிராக்டர் பேரணியில் விவசாயி உயிரிழப்பு: அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!
டெல்லி: டிராக்டர் பேரணியில் விவசாயி உயிரிழப்பு தொடர்பான முழு விசாரணையை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு டெல்லி காவல் துறைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு நீதிபதி யோகேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்ட டெல்லி அரசு, டெல்லி காவல் துறை, உத்தரப் பிரதேச காவல் துறை, மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். விவசாயி உயிரிழப்பு தொடர்பான முழு அறிக்கையையும், அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கும் தேதியை பிப்ரவரி 26 அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என டெல்லி காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கண்ணை மறைத்த பக்தி: தன்னை தானே குழிக்குள் புதைத்துக் கொண்ட பெண்!