கரோனா பரவல் அதிகரித்துவருவதால், கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகளைப் போன்று ரெம்டெசிவிர் மருந்தையும் பயன்படுத்தலாம் என்று சமீபத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கியது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ரெம்டெசிவிர் மருந்துகளின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், ரெம்டெசிவிர் மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிடம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம், ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்குக் கள்ளச்சந்தையில் விற்பனை நடப்பதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், "கரோனா பாதிப்பு குறைந்திருந்தபோது, ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தியின் வேகம் குறைக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது திடீரென கரோனா எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால், ரெம்டெசிவிர் மருந்துக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது, மீண்டும் உற்பத்தியை அதிகரிக்க மருந்து உற்பத்தியாளர்களிடம் வலியுறுத்தியுள்ளோம்.
அதே சமயம், ரெம்டெசிவிர் மருந்தைப் பதுக்கிவைத்து, சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதாகப் புகார் கிடைக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.