தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’என் உயிரின் உயிரேவுக்கு ஆழ்ந்த இரங்கல்’ - ஹாரிஸ் ஜெயராஜ் - ஹாரிஸ் ட்விட்டரில் வருத்தம்

பிரபல பாடகர் கேகே மறைவுக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

’என் உயிரின் உயிரேக்கு இரங்கல்’ - ஹாரிஸ் ட்விட்டரில் வருத்தம்
’என் உயிரின் உயிரேக்கு இரங்கல்’ - ஹாரிஸ் ட்விட்டரில் வருத்தம்

By

Published : Jun 1, 2022, 12:02 PM IST

சென்னை:தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் அதிக பாடல்களை பாடிய பாடகர் கேகே நேற்று (மே 31) கொல்கத்தாவில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “என் உயிரின் உயிரேவிற்கு இரங்கல்கள்” என உருக்கமாக தெரிவித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், பாடகர் கேகே அதிகமான ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

இவர்களது காம்போவில் வந்த சாமி, அந்நியன், காக்க காக்க, 12B, ஆகிய படங்களில் கேகே பாடிய அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவையாகும். இந்நிலையில் ஹாரிஸ் இசையில் இறுதியாக லெஜண்ட் திரைப்படத்திற்கு ’கொஞ்சி கொஞ்சி’ என்ற பாடலை பாடியிருந்தார் பாடகர் கேகே.

இதற்கிடையில், பாடகர் கேகே மறைவுக்கு நடிகர் மாதவன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

யுவன் அவரது ட்விட்டர் பக்கத்தில், “இந்த வாரம் இசை துறையினருக்கு சோகமான வாரமாகும். சித்துவும், கேகேவும் இறந்துள்ளனர். இது இந்த இசைத் துறைக்கே பெரும் இழப்பாகும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பாடகர் கேகே மறைவு; பிரதமர் முதல் பிரபலங்கள் வரை இரங்கல்!

ABOUT THE AUTHOR

...view details