தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

“இந்நேரம் ராகுல் பிரதமராக இருந்தால், கோவிட் இறப்பு அதிகமாக இருக்கும்”- அமைச்சர் பேச்சு

ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தால் அவரால் கோவிட்-19 நெருக்கடியை சமாளித்திருக்க முடியாது, “இந்நேரம் ராகுல் பிரதமராக இருந்திருந்தால், கோவிட் இறப்பு அதிகமாக இருக்கும் என இமாச்சலப் பிரதேச வனத்துறை அமைச்சர் ராகேஷ் பதானியா தெரிவித்துள்ளார்.

Himachal Minister targets Rahul  Had Rahul been PM, India would have seen more COVID deaths: Himachal Minister  இந்நேரம் ராகுல் பிரதமராக இருந்தால், கோவிட் இறப்பு அதிகமாக இருக்கும்  கோவிட்-19 நெருக்கடி  இமாச்சலப் பிரதேச வனத்துறை அமைச்சர் ராகேஷ் பதானியா  Himachal Minister  India COVID deaths
Himachal Minister targets Rahul Had Rahul been PM, India would have seen more COVID deaths: Himachal Minister இந்நேரம் ராகுல் பிரதமராக இருந்தால், கோவிட் இறப்பு அதிகமாக இருக்கும் கோவிட்-19 நெருக்கடி இமாச்சலப் பிரதேச வனத்துறை அமைச்சர் ராகேஷ் பதானியா Himachal Minister India COVID deaths

By

Published : Nov 2, 2020, 4:55 PM IST

பலம்பூர் (இமாச்சலப் பிரதேசம்): இமாச்சலப் பிரதேசத்தின் வனத்துறை அமைச்சர் ராகேஷ் பதானியா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்து பேசினார்.

அவர் கூறுகையில், “இந்நேரம் ராகுல் பிரதமராக இருந்தால், கோவிட் இறப்பு அதிகமாக இருக்கும்” என்றார். மேலும், “கோவிட்-19 நெருக்கடியை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக எதிர்கொண்டு, நாட்டு மக்களை கோவிட்-19 நெருக்கடியிலிருந்து பாதுகாத்துள்ளார்.

கோவிட்-19 நெருக்கடி காரணமாக ஃபிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் அதிகளவு இறப்பு விகிதம் காணப்படுகிறது. இந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவு” என்றார்.

இமாச்சலப் பிரதேச வனத்துறை அமைச்சர் ராகேஷ் பதானியா

மாநில அரசியல் குறித்து பேசுகையில், “இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும். காங்கிரஸில் உள்கட்சி பிரச்னை உள்ளது. ஒருபக்கம் ஆஷா தேவியையும், மறுபக்கம் பாலியையும் முதலமைச்சர் வேட்பாளராக கை காட்டுகின்றனர்.

இவர்கள் தவிர 14 தலைவர்கள் முதலமைச்சர் வேட்பாளர் அந்தஸ்துக்கு காய்நகர்த்திவருகின்றனர். இதே நிலைமை நீடித்தால் காங்கிரஸ் காணாமல் போய்விடும். முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் கிரிக்கெட் பந்தயமே நடத்தலாம்” என்றார்.

இதையும் படிங்க: வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி செல்லும் கேரளா - ராகுல் பாராட்டு

ABOUT THE AUTHOR

...view details