தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 14, 2020, 2:40 PM IST

ETV Bharat / bharat

சாதியத்தை ஊக்குவித்தாரா ஆதி சங்கராச்சாரியார்?

அகமதாபாத்: பாவ்நாத் பகுதியில் ஆதி சங்கராச்சாரியார் நிறுவியதாக கூறப்படும் உடற்பயிற்சி கூடத்தில் இன்றளவும் சாதிய பாகுபாடு நிலவிவருகிறது.

Adi Guru Shankaracharya
Adi Guru Shankaracharya

நீண்ட காலத்திற்கு முன்பு, ஆதி குரு சங்கராச்சாரியார் இந்து மதத்தைப் பரப்பவும், மத வாழ்க்கை முறையைப் பின்பற்ற மக்களை ஊக்குவிக்கவும் அகதா எனும் உடற்பயிற்சி கூடங்களை (Gymnasium) அமைக்கும் பாரம்பரியத்தைத் தொடங்கினார்.

அதே நோக்கத்திற்காக பாவ்நாத் கிர்னார் மலையில் பஞ்ச தஷ்னம் அக்னி அகதா அமைக்கப்பட்டது. இங்கு தாய் தெய்வமான காயத்ரியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இங்கு சிவராத்திரி, பரிக்ரமா போன்ற நிகழ்வுகளில் இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஆதி குரு சங்கராச்சாரியாரால் நிறுவப்பட்ட இந்த அகதா, நம்முடைய நவீன வாழ்க்கையுடன் முற்றிலும் முரண்பட்டது. இங்கு இன்றும் முந்தைய கால மத மரபுகள் பின்பற்றப்படுகின்றன.

இந்த அகதாவில் ஒருவர் தன்னை துறவியாக மாற்ற வேண்டும் எனில் அவர் பிராமணராகவோ அல்லது சத்திரியராகவோ இருக்க வேண்டும். வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் இங்கு துறவியாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

இந்த அகதாவை நிறுவியவர் வேதாந்த மார்க்கத்துக்குப் பெரும் வித்திட்ட ஆதி சங்கராச்சாரியார் என்று கூறப்படுகிறது. இவர் நிறுவியிருக்கும்பட்சத்தில் இங்கிருக்கும் விதிகளும், முரண்களும் இவராலேயே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியெனில், சங்கராச்சாரியார் சாதிய ரீதியான பாகுபாடுகளுடன்தான் இந்து மதத்தை வளர்த்தெடுத்தாரா? என்ற சந்தேகம் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: கற்பி... ஒன்று சேர்... புரட்சி செய்...! - நூற்றாண்டைக் கடந்து நிற்கும் 'ஜெய்பீம்'

ABOUT THE AUTHOR

...view details