வாரணாசி:ஞானவாபி மசூதி வளாகத்தை ஆய்வு செய்தபோது கிடைத்த பொருளை ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடக்கோரி இந்து வழிபாட்டாளர்கள் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், ஞானவாபி மசூதியின் 'வாஸு கானா'வில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் சிவலிங்கம் என்று கூறப்படும் பொருளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த, அதை கார்பன் டேட்டிங் மூலம் ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரியிருந்தனர்.